பாராளுமன்றத்தில் திருடர், பொலிஸ் விளையாட்டு முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போது, கட்சித் தலைவர்கள் கூட்டம் நடாத்தப்பட்டு அதிரிலிருந்து தான் பாராளுமன்ற நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றிலிருந்து 3 அல்லது 4 பேர் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு செல்கின்றனர்.
அவர்களுக்கு விரும்பியவாறு பாராளுமன்ற செயற்பாடுகள் நடைபெறாது. தற்போது ஒரு மாத காலமாக இவர்கள் பாராளுமன்றத்தில் திருடர், பொலிஸ் விளையாட்டை முன்னெடுக்கின்றனர்.
நேரடியாக வருவதில்லை. சிற்றுண்டிச்சாலைக்கு சென்று உணவருந்தி விட்டுத்தான் செல்கின்றனர். என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் திருடர், பொலிஸ் விளையாட்டு