தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்துகொண்டு அரச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதால், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில், யாதுரிமை எழுத்தாணை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிலா கொணவல இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. அரசியலமைப்பின் 91 (1) ஈ சரத்திற்கமைய இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, அகிலாவிராஜ் காரியவசம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட ஐவர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.