இந்தியாவின் முன்னணி நிகழ்ச்சி விநியோகத் தலமான டாடா ஸ்கை தொலைக்காட்சிகளில் முதல் முறையாக 24 மணி நேர விளம்பரங்கள் இல்லாத, மிகச்சிறந்த தியேட்டர் குழுக்களின் நாடகங்களைத் தனது சந்தாதாரர்களுக்கு வழங்கும் என டாடா ஸ்கை தியேட்டர் அறிவித்துள்ளது.
ஜீ தியேட்டர் உதவியுடன் இசை,வரலாறு,சமூகம்,காதல், நகைச்சுவை, நையாண்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 100+ அதிகமான நாடகங்களைத் திரைப்பட வடிவில் வீட்டிலிருந்தே கண்டு ரசிக்கும் வகையில் டாடா ஸ்கை தியேட்டர் வழங்கும்.
இந்தி மற்றும் ஆங்கில நாடகங்கள் இப்போதைக்கு ஒளிபரப்பாகும். இவற்றுக்கு மெருகேற்றும் வகையில் திரைக்குப் பின்னால் நடைபெறும் நிகழ்வுகள், நடிகர்கள், நாடக உருவாக்கத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு பிரிவினர்களுடனான நேர்காணல்கள் ஆகியவை இடம்பெறும். “எங்கள் சந்தாதாரர்களுக்கு வித்தியாசமான மற்றும் சிறந்த நிகழ்ச்சிகளை வழங்குவதே டாடா ஸ்கை நோக்கமாகும்.
புதுமையான சேவைகளை வழங்க வேண்டும் என்னும் எண்கள் கொள்கைக்கு ஏற்ப சிறந்த மதும் கற்பனை கலந்த நாடகங்களை தொலைக்காட்சித் திரைகளில் டாடா ஸ்கை தியேட்டர் ஒளிபரப்பும்” என டாடா ஸ்கை முதன்மை வர்த்தக அதிகாரி பல்லவி பூரி கூறினார்.
டாடா ஸ்கை லிமிடெட், டாடா சன்ஸ் மற்றும் 21ஆவது செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முனைவாகும். 2001இல் நிறுவப்பட்டு 2006இல் தந்து சேவைகளைத் தொடங்கிய டாடா ஸ்கை நிறுவனம் பே டிவி மதுரம் ஓடிடி சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னை நிகழ்ச்சி விநியோக தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.