செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய அமைச்சரவை விபரம்

புதிய அமைச்சரவை விபரம்

2 minutes read

புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 29 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், 29 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

1.பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன் விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு.

2.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்.

3.காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்தசாசனம் மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர்.

4.மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்.

5.லக்ஸ்மன் கிரிஎல்ல – அரச முயற்சியான்மை, மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்.

6.ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்.திலக் மாரப்பன – வெளிவிவகார அமைச்சர்.

  1. ராஜித்த சேனாரத்ன – சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்.
  2. ரவி கருணாநாயக்க – மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்.
  3. வஜிர அபேவர்தன- உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர்.
  4. ரிஷாட் பதியூதீன் – கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்.
  5. சம்பிக்க ரணவக்க – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்.
  6. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக நவீன் திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
  7. பி.ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் அமைச்சர்.
  8. கபீர் ஹாசீம் – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர்.
  9. ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம், இடர்முகாமைத்துவ அமைச்சர்.
  10. கயந்த கருணாதிலக்க – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்.
  11. சஜித் பிரேமதாச – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர்.
  12. அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர்.
  13. பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்.

21.சந்திராணி பண்டார – மக்களிர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் வரண்ட வலய அபிவிருத்தி   அமைச்சர்.

  1. தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்.
  2. அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்.
  3. அப்துல் ஹலீம் – தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர்.
  4. சாகல ரத்நாயக்க – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்.
  5. ஹரின் பெர்னாண்டோ – தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.
  6. மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழி, சமூக முன்னேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சர்.
  7. தயா -கமகே தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்.
  8. மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More