தமிழ் நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களில் தோடர் இன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் உப்பீட்டு பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஆண்டு நடந்த உப்பீட்டு பண்டிகையை ஒட்டி, புல் வெளியில் இரண்டு குழிகளை வெட்டி அதில் தண்ணீர் ஊற்றி உப்பை அதில் கொட்டி வைத்தனர்.
பின்னர், கோயில் எருமை மற்றும் வளர்ப்பு எருமைகளை கூட்டி சென்று அந்த உப்பு நீரை குடிக்க செய்தனர். இப்படி உப்பு நீரை குடிப்பதால் எருமைகளுக்கு நோய் தாக்காது என்றும், அவைகளின் இனவிருத்தி அதிகரிக்கும் என்றும் ஆதிவாசி தோடர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.