சந்திரனுக்கு முதற்தடவையாக அனுப்பிய ரோபோ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் மறுபக்கத்தை ஆராயும் இலக்குடன், சாங் இ – 4 என்ற விண்கலம் சீனாவால் அனுப்பப்பட்டது.
நிலவின் தொலைதூரப் பகுதியில் ரோபோ விண்கலம் ஒன்று தரையிறங்குவது இதுவே முதல் தடவையாகும். குறித்த விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ள படுகையில் பீஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மண்ணியல் வகையை ஆராய்வதற்கும் உயிரியல் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கும் தேவையான கருவிகள் பொருத்தப்பட்டு, இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நிலவுக்கு சென்ற விண்கலங்கள் அனைத்தும் நிலவின் புவியை நோக்கிய பகுதியிலேயே தரையிறங்கியதுடன், இதுவரை கண்டறியப்படாத நிலவின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கலம் தரையிறங்குவது இதுவே முதன்முறை என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.