வட கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஹித்தன் மாவட்டத்தில் படக்ஷன் மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்று மேடையில் இருந்து 220 அடி ஆழத்திற்கு சென்று தங்க அகழ்வினை மேற்கொண்ட போது, மேலிருந்த மணல் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த மீட்பு படையினர், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.