நிரம்பி வளிகிறது தனிமை
மனிதர்களால் ஆக்கிரமிக்கபட்ட
நகர் இருளுக்குள் அடங்கும்
அயலவரை அறியாத அமைதி
இரவு உணவுக்காய் தொலைக்காட்சி
பெட்டிக்குள் தொலைபேசிக்குள்
அல்லது எதோ ஒரு இன்பத்துள்
துன்பத்துள் தொலைந்திருக்கலாம்
எப்போதும் எதிர்பார்போடு விழித்திருக்கும் அருகிருக்கும் மருத்துவமனை
அப்பப்போ திகிலூட்டும்
அவசர சிகிச்சை வாகன ஒளி
இயல்பாக சிறு நிமிடம்
யாருக்காகவோ மனம் அடிக்கும்
கருமை பூசிய வானம் பிரித்து
மழை துழிகள் கொட்டுகிறது
மின் ஒளியில் நனைந்த உருவங்கள்
மின்னி மறைய வாகனத்துள் மழையுடன் பயணிக்கும் அதிஸ்டம் யாருக்கோ
ஜன்னலில் நிறைந்திருக்கும் மரங்கள்
ஆன்மாவை திருப்ப ஒரு மழை முத்தம் கேட்கிறது
கணனியும் மின் குமிழும் வெறுமையை
நிரப்ப தனிமையின் சலிப்பை விரட்டி
கனவிலும் வராத உனை
எப்போதும் புதிய கவிதையாய் எழுதிக்கொண்டிருக்கிறது காதல் ..
-றஞ்சினி