புகைப்படத் தொகுப்பு

Home சினிமா `தேசிய விருது வென்ற ஒரே தமிழ்ப்படம். என்ன சொல்கிறார் ‘பாரம்’ இயக்குநர்?

`தேசிய விருது வென்ற ஒரே தமிழ்ப்படம். என்ன சொல்கிறார் ‘பாரம்’ இயக்குநர்?

2 minutes read

2012-ல் இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இப்படி ஒரு விஷயம் நடப்பது வெளியுலகிற்கு அவ்வளவா தெரியறதில்லை

priya krishnaswamy

“படத்திற்கும் எங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது.” – ‘தேசியவிருது’ பெற்ற மகிழ்ச்சி, இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி பேச்சில் தெரிகிறது. அவர் இயக்கிய ‘பாரம்’ சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசியவிருதினை வென்றுள்ளது.

“உங்களைப் பற்றி?” priya krishnaswamy

“புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்ல எடிட்டிங் படிச்சேன். 1987-லிலிருந்து மும்பையில் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். ‘ஓம் தர்-பி-தார்’, ‘பெர்ஸி’, ‘பாம்பே பாய்ஸ்’, ‘போபால் எக்ஸ்பிரஸ்’ என ஆவணப்படங்கள், டிவி சீரியல்களுக்கு எடிட்டிங் நான்தான். விளம்பரத்துறையில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். வெவ்வேறு ஜானர்களில் 20-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியிருக்கேன். 2007-ல்தான் சினிமாவுக்கான கதையை எழுதித் தயாரிப்பாளரைத் தேட ஆரம்பிச்சேன்.

2009-ல் நான் எழுதி, இயக்கிய ‘கங்கோபாய்’ படம் ஆம்ஸ்டர்டாம் மற்றும் லொக்கார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்வானது. 2013-ல் இந்தி, மராத்தியில் படம் ரிலீஸானது. அதுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குப் படத்தை அனுப்பினோம். இப்போ, நான் இயக்கிய ‘பாரம்’ படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு.”

“‘பாரம்’ படம் என்ன களம்?”

“இது என்னுடைய இரண்டாவது படம். இந்தியன் பனோரமாவில் உலக அளவில் திரையிடப்பட்டது. 2018-ல் ‘ICFT-UNESCO Gandhi Medal’ங்கிற விருதுக்கு இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட இந்தப் படம், இப்போ தேசிய விருது வாங்கியிருக்கு. ஒரு உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சு எடுக்கப்பட்ட படம் இது. சில காரணங்களால பெற்றோர்களை அவங்க பிள்ளைங்களே ‘கருணைக்கொலை’ங்கிற பெயர்ல கொடூரக் கொலை பண்றாங்க. அதைத்தான் இந்தப் படத்துல சொல்லியிருக்கோம்.

baaram

2012-ல் இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இப்படி ஒரு விஷயம் நடப்பது வெளியுலகிற்கு அவ்வளவா தெரியறதில்லை. வருடத்துக்கு 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இப்படி சாகுறாங்க. இது உலகெங்கும் வெவ்வேறு இடங்கள்ல வேற வேற பெயர்ல நடக்குது.”  என்றார் பாரம் படத்தின் இயக்குனர்.

நன்றி – விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More