4
கால் நீட்டி
குந்தி இருந்தபடி
கட்டளை இடுகிறது
என் மனக்குரங்கு
அதை கட்டிப்போட்டு
சும்மா இரு
என்று சொல்ல
நான் என்ன
புத்தனா புனிதனா
ஆசையும் பாசமும் கொண்ட
அந்த மனக்குரங்கு தானே
அது ஆடி அடங்கும் வரையிலிம்
எந்தக்கிளை வேண்டுமானாலும்
தாவித் திரியட்டும்
ஆசையும் பாசமும் அகன்று
அந்த ஞானம் அடைந்தவனை
அறியும் வரையிலும்
இப்போதைக்கு இது
இப்படியே
இருந்து தொலையட்டும் .
-பா .உதயன்