செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் யாழ் புத்தக கண்காட்சியில் புலிகளை தூற்றும் சிங்கள நூல்கள்

யாழ் புத்தக கண்காட்சியில் புலிகளை தூற்றும் சிங்கள நூல்கள்

1 minutes read

No photo description available.

நேற்று முந்தினம் யாழ்ப்பாணத்தில் புத்தக திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்த புத்தக திருவிழாவுக்கு உள்நாட்டிலிருந்து வெளிநாட்டில் உள்ள இலக்கிய வாசகர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த புத்தகக் கண்காட்சியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொச்சைப் படுத்தும் சிங்கள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தமிழீழத்தில் நிகழ்ந்த போராட்டம், சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்த நூல்கள் எவற்றையும் காண முடியவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஆளும் சிங்கள அரசாங்கத்தின் வடக்கிற்கான அரசாங்க அதிகாரியாக வடக்கு மாகாண ஆளுநர் செயற்படாது, மைத்திரிபால சிறிசேனவின் குறுநில மன்னர் போல செயற்பட்டு வந்துள்ளதாகவும் தற்போதும் அதுவே வெளிப்படுவதாகவும் ஈழத்து அறிஞர்கள் விசனம் தெரிவித்துள்ளன்.

வணக்கம் லண்டனுக்காக யாழிலிருந்து கண்ணன்

Image may contain: 1 person

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More