காபூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தனது பாட்டி மரணத்திற்கு விடுமுறை எடுக்க அனுமதி கேட்பதற்கு பதில், தனது மரணத்திற்கு விடுமுறை அளிக்கும் படி தனது தலைமை ஆசிரியருக்கு விண்ணப்ப கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மதிப்பிற்குரிய தலைமையாசியர் அவர்களுக்கு, இன்று காலை(ஆகஸ்ட் 20ந்தேதி) 10 மணியளவில் நான் இறந்துவிட்டேன். அதனால் எனக்கு அரைநாள் விடுப்பு வழங்க கேட்டுக்கொள்வதாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்க்காமல் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த கடிதம் பள்ளியில் உள்ளவர்கள் மூலம் லீக்காக இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி அறிந்த பெற்றோர்களும் அந்தப் பகுதி மக்களும் பொறுப்பில்லாமல் இருக்கும் தலைமையாசிரியர் மீதும், அந்த பள்ளியின் மீதும் அதிருப்தியும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.