தனி ஈழ கொடி என்பதொன்றும் கிடையாது, அவ்வாறான கொடியை ஏற்றவும் இல்லை அரசியல் தேவைகளுக்காகவே இக்குற்றச்சாட்டு ஆரம்ப காலத்தில் இருந்து பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் என முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் தமிழ் பிரதிநிதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளை முன்னெடுக்காமல் எவ்வித பயனும் இன்றி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.இது அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தவறான தீர்மானமாகும்.
தமிழ் மக்களுக்கு உரிமைகளும், அபிவிருத்திகளும் கிடைக்கப் பெறவேண்டுமாயின் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியர்க தெரிவு செய்யப்பட வேண்டும். இவ்விடயங்களை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.