ஈழம் தொடர்பில் உருவாக்கப்பட்ட சினம்கொள் என்ற திரைப்படத்தின் முன்னோட்டம், தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாத்திரமின்றி உலகளவிலும் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள சினம்கொள் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டில் ஈழத்தில் திரையாக்கம் செய்யப்பட்டது.
ஈழ, தென்னிந்திய, சிங்கள கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் உருவான இத் திரைப்படம், 2009இற்குப் பின்னரான ஈழப் பின்னணியில் தடுப்பில் இருந்து விடுதலையாகும் ஒரு போராளியின் கதையினையும் பேசுகின்றது.
இதேவேளை, கனடா, பிரான்ஸ், நோர்வே போன்ற புலம்பெயர்நாடுகளில் சிறப்பு திரையிடல் கண்ட இத் திரைப்படம் மக்களின் பெரும் வரவேற்றை பெற்றிருந்தது. திரைப்படத்தை பார்த்த பலரும் ஈழத்தை சரியாகவும் பிரமாண்டமான முறையிலும் காண்பித்திருப்பதாக கூறியுள்ளனர்.
ஈழக் காட்சிகளும் ஈழத் திரைமொழியும் மிகவும் சிப்பாக இந்த படத்தில் கையாளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. உலகளவில் பெரும் வரவேற்றை இந்தத் திரைப்படம் பெறும் என்று திரைப்படத்தை பார்த்த திரைத்துறை கலைஞர்கள் பலரும் கூறுகின்றனர்.
இந்த திரைப்படத்தை பார்வையிட்ட தென்னியந்தி இயக்குனர் இமையம் பாரதிராஜா, பிரபாகரனின் சினிமா கனவை சினம்கொள் நிஜமாக்கியுள்ளதாகவும் புகழராம் சூட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமான இன்றைய தினம் இத் திரைப்படத்தின் முன்னோட்டத்தை ஈழத்தை சேர்ந்த திரைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. 2020 ஜனவரியளவில் இந்த திரைப்படத்தை உலகளவில் வெளியிடவுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை படத்தின் முன்னோட்டத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியிருப்பதாவது,
சகல ஒடுக்கு முறைகளையும் களைந்த சமத்துவமனா சோசலிச தமிழ் ஈழத்தை உருவாக்குதே எம் தேசிய தலைவரின் கனவு. அந்த உன்னதமான தமிழ் ஈழத்தில், தன் மக்கள் சுதந்திரமான வாழ்வை யாருக்கும் அடிபணியாமல் வாழவேண்டும், பண்பாட்டிலும் கலசாரத்திலும் எங்கள் அடுத்தலைமுறை தொடர்ந்து பயணிக்க வேண்டும், உலக தொழிநுட்பத்திலும் கலைகளிலும் நாம் திறமையானவர்களாய் உயர வேண்டும் என்பவை அவர் கண்ட கனவுகள். இன்று அவர் பிறந்த இப்பொன்னான நாளில் அவரின் திரைக்கனவுக்கு பலம் சேர்க்கும் வகையில் ‘சினம்கொள்’ என்ற நம் திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கின்றோம்.
–ரஞ்சித் ஜோசப்.