சென்னை புத்தகக் கண்காட்சி நாளைய தினம்(வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. சென்னையில் 43 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தக் கண்காட்சியை, தமிழ்நாடு மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மேலும், பதிப்புத் துறை, நூல் விற்பனைத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், தமிழக முதல்வர் விருதுகள் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
நாளை ஆரம்பிக்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் 800 அரங்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சியில் 20 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.