மதுரை மாவட்டம் , நேரு நகரை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்துள்ளனர் .
அவர் மனுவில் , நான் மதுரை மாவட்டம் , ஆயுர்தர்மம் என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் . இயற்கை விவசயதோடு சேர்ந்து பனை மரங்களின் முக்கியத்துவத்தை பற்றியும் அவை அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் பல ஆண்டுகளாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் .
பனைமரம் தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் அடையாளமாக இருந்து வருகிறது . இதற்கு தக்க சான்று நமக்கு கிடைக்கப்பெற்ற பெரும்பாலான ஓலைச்சுவடிகள் பனை ஓலையில் செய்யப்பட்டவையே எடுத்துக்காட்டிற்கு திருக்குறள் .
பனை மரத்தின் பயன்கள் நொங்கு , கல்லு , பதனி , கருப்பட்டி , தவுனு , பனங்கிழங்கு , குறுத்து , பணம்பழம் , விறகு மற்றும் பல , அடி முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மனிதர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகும்.
தூத்துக்குடி போன்ற கடலோரப் பகுதிகளில் உள்ள பனை மரங்கள் மண்ணரிப்பைத் தடுத்து சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறது .
இந்தியாவில் மொத்தம் 10.2 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி உள்ளன .இவற்றில் 50% அதிகமான மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சேலம், சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் தான் உள்ளன .
சமீபகாலமாக பல்வேறு தேவைகளுக்காகாக முக்கியமாக கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் பனை மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன . கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது .
இதே போல் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வந்தால் இயற்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் அதனால் ஏற்படும் விளைவுகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் பாதிக்கும் . ஆகையால் பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்து அதனை பாதுகாக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்து உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் இயற்கையை வளங்களை பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை மேலும் வருங்கால சந்ததியினரை மனதில் கொண்டு அன்றாட வாழ்க்கைக்கு அதிக அளவில் பயன்படும் பனை மரங்களை அதிக அளவில் நட உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் .