இயக்குனர் சிவா-ரஜினிகாந்த் இருவரும்முதன் முதலாக கூட்டணி அமைத்துள்ளனர்.படத்தை ரசிகர்கள் தலைவர் 168 என்று தான்கூறி வருகின்றனர்,
பட பெயர் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஆண்ணாத்த, மன்னவன், வியூகம் போன்ற பெயர் கிசுகிசுக்கப்படுகிறது.தற்போது படத்தில் நடிகை குஷ்புவின் வேடம் இதுதான் என வைரலாக செய்தி பரவுகிறது.ரஜினியின் முதல் மனைவியாக நடிக்கும் குஷ்பு பின் ஏதோ பிரச்சனையால் பிரிகிறாராம்.
பின் ரஜினி இரண்டாவதாக மீனாவை திருமணம் செய்கிறாராம்.இதற்கு நடுவில் ரஜினிக்கு எதிரியாகும் குஷ்பு அவரை பழிவாங்குகிறாராம்.இதுதான் படத்தின் கதை என ஒரு செய்தி உலா வருகிறது.