ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அதன்படி , சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான வைபவத்திலும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டது.
ஆயினும் , அரசாங்கத்தின் மேலாதிக்கவாத வெறிக்கு எதிராக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து கொழும்பில், தேசியக் கீதத்தை தமிழ் மொழியில், இன்றுக்காலை இசைத்துள்ளனர்.
இந்நிலையில் அதுதொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.