இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் இன்று , ஆனால் அது தமிழ் மக்களின் கரிநாள் என தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாகநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என சில அமைப்புக்களினால் ஏற்பாடு செய்தது.
அவர்களின் குற்றம் சாட்டு இலங்கை அரசு 1956 இனக்கலவரம், 1983 கறுப்பு ஜூலை மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என தனது கட்டமைக்கப்பட்ட அழிப்பினை தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடாத்தியது என்பதே ஆகும்.
மேலும் இம்முறை இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என அரசாங்கம் அறிவித்திருந்தமைக்கு பெரும் எதிர்ப்பு காணப்படுகிறது.இதேவேளை இராணுவத்தின் கைகளில் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட 20,000 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கும் இதன்போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.