மிகவும் தீவிரமான மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலானது கொரோனா வைரஸ் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் வூகானில் இருந்து திரும்பியவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை பிரிட்டன் உறுதிசெய்துள்ளது.
இதுதவிர, வூகானில் இருந்து திரும்பியவர்கள் அனைவரும் 14 நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரானா வைரஸ், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான, மிகவும் தீவிரமான பிரச்சனை என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
கொரானா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.