உலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானம் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திறந்துவைக்கவுள்ளார். குஜராத் மாநிலத்தில் மோதிரா எனும் இடத்தில் 800 கோடி இந்திய ரூபா செலவில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டிகளைக் காணக்கூடிய விதத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியான பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முற்றிலும் குளிரூட்டப்பட்ட 75 தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் ஆயிரத்து 875 பேர் அமரமுடியும். மைதானத்தின் வெளிப்புரத்தில் மூவாயிரம் கார்கள் மற்றும் 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வசதி காணப்படுகிறது. மோதிரா வளாகத்தில் கிரிக்கட் மைதானம் மாத்திரமின்றி ஹொக்கி, குத்துச்சண்டை, தடகளம், கபடி, நீச்சல், பெட்மிட்டன் மற்றும் ஸ்குhஸ் போன்ற விளையாட்டுக்களுக்கான மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வருகைதரவுள்ளார். அவர் உலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தை திறந்துவைப்பாரென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.