அரச வரிச்சலுகையின் பயன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.எம்.பவ்சர் தெரிவித்தார்.
பொருள்உற்பத்தி கம்பனிகள் உள்ளிட்ட 700 நி|றுவனங்களிடம் எழுத்து மூலம் வினவியதன் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது,கட்டிட பொருட்கள், உணவு பொருட்கள், சிறுவர் உற்பத்திகள், அழகுசாதன பொருட்கள், மின் உபகரணங்கள், சமையல் அறை உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் அரச வரிச்சலுகையின் பயன்களை மக்களை சென்றடையச் செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்க போவதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வரிச்சலுகையின் பயன்களுக்கு பால்மா,சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்படும்.