கலிபோர்னியாவின் பாம்டேலில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்கங்க் ஒர்க்ஸ் தொழிற்சாலையில், 247.5 மில்லியன் டாலர் செலவில் நாசாவின் புதிய சோதனை (மாதிரி) விமானமான Supersonic X-plane?( X-59 ) கட்டமைக்கப்பட்டு வருகிறது.
Supersonic விமானத்தை உருவாக்கம் நோக்கம் நிலத்தின் மீது ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக மற்றும் குறைந்த சத்தத்துடன் பறக்க விடுதல் ஆகும்.விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin), விமானத்தை உருவாக்கும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த X-59 சூப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டாலும், மிகப்பெரிய சப்தம் எழாமல் காற்றில் சீறி பாயும் என்பதே சிறப்பம்சம் என நாசா கூறியுள்ளது.