கோப் குழு பரிந்துரையின் படி கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு தொடர்பிலான ஒப்பந்த வழங்கலை கண்டறிய உடனடி விசாரணைகளை ஆரம்பிக்கபடவுள்ளது .
இவ் பரிந்துரையை தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்றைய தினம் கோப் குழு கூடிய போது விளையாட்டுத்தறை அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை முன்வைத்து துரிதமாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கூறியது.
இதன்போதே கிரிக்கட் போட்டிகளின் ஒளிபரப்பு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடப்பட்டது. சர்வதேச ஒலி, ஒலிபரப்பு தொடர்பில் ஒப்பந்த வழங்கலின் போது குறைவாக தொகை குறிப்பிடப்படுவதால் சுமார் 310 கோடி ரூபாவை ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இழந்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.