செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தினால் மாணவர்கள் கௌரவிப்பு!

மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தினால் மாணவர்கள் கௌரவிப்பு!

2 minutes read

வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் மா. கதிர்காமராஜா தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, சிறப்புரையினை ஜனாதிபதி சட்டத்தரணியும் மன்றத்தின் ஸ்தாபகருமான மு.சிற்றம்பலம் வழங்கினார். அதிபர் உரையினை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் தா.அமிர்தலிங்கமும் சிறப்பு வருந்தினர் உரைகளை வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணனும் ஆற்றியிருந்தனர்.

இதன்போது, மாவீரன் பண்டாரவன்னியனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும் பிரமுகர்களின் உரைகள் அமைந்திருந்தன.

தொடர்ந்து 2019ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தரத்தில் வவுனியா மாவட்டத்தில் அனைத்து பாடத்திட்டத்திலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அ.புஸ்பநாதனும் மேலதிக அரசாங்க அதிபர், சட்டத்தரணிகள், பாடசாலை அதிபர்கள், கலைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More