தேவையானவை :
நல்லெண்ணெய் – கால் கப்
நெல்லிக்காய் பொடி – கால் கப்
மஞ்சள்- 1 ஸ்பூன்
பட்டைப் பொடி – கால் ஸ்பூன்
கிராம்புப் பொடி – அரை ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்.
தயாரிக்கும் முறை :
மேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை :
1. இந்த எண்ணெயால் தினமும் காலையில் ஆயில் புல்லிங்க் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்து இருக்க வேண்டும். பின்னர் உமிழ்ந்து விடுங்கள். இப்படி தினமும் ஆயில் புல்லிங்க் செய்வதால் உங்கள் ஈறு பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.
தினமும் இந்த மூலிகைப் பொடியால் பல் துலக்க வேண்டும். ஆடும் பல்லின் மீதும், அதன் ஈறின் மீதும் இந்த பொடியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி காலை மற்றும் இரவு தூங்கும்போது செய்தால் ஆடும் பல் கெட்டிப்பட்டுவிடும்.
நெல்லிக்காய் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலப்படுத்துகிறது. உப்பு கிருமி நாசினி மற்றும் அங்கிருக்கும் தொற்றுக்கலை நீக்குகிறது. நல்லெண்ணெய் பற்களின் நடுவே ஊடுருவி ஈறுகளை பலப்படுத்தும். பட்டை கிராம்பு, பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும்.