0
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று கையெழுத்திட்டார்.
அவர் இம்முறையும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கடந்த மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுக்கள் மார்ச் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.