வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாமிலிருந்து வெளியேற முயன்ற 7 உய்கூர் முஸ்லீம்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவின் சின்ஜியாங் மாகாணத்திலிருந்து வெளியேறி துருக்கியில் தஞ்சமடையும் முயற்சியில் தாய்லாந்து வழியாக பயணித்த 400க்கும் மேற்பட்ட உய்கூர் முஸ்லீம்களில் 50 பேர் இன்னும் தாய்லாந்தில் இருந்து வருகின்றனர். இதில் 7 பேருக்கே, தடுப்பு முகாமை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்கூர் முஸ்லீம்களின் மத நம்பிக்கையை பிரச்னைக்குரியதாக பார்க்கும் சீன அரசு, அவர்களின் மத நம்பிக்கையை போக்கும் விதத்தில் ஆயிரக்கணக்கான உய்குர் முஸ்லீம்களை மீள் கல்வி மற்றும்தற்காலிக முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறது. இதை சித்ரவதை முகாம்களாகவும் மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன.