புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதித் தருணம் எப்படி இருக்கும்? கண் கலங்கியவாறு கூறும் மருத்துவர்

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதித் தருணம் எப்படி இருக்கும்? கண் கலங்கியவாறு கூறும் மருத்துவர்

2 minutes read

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறக்கும் நோயாளிகளின் இறுதி தருணங்கள் குறித்து மருத்துவர் ஒருவர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

இத்தாலியின் Milan-ல் இருக்கும் San Carlo Borromeo மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் Francesca Cortellaro என்ற மருத்துவர், கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதி நிமிடங்களை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

அதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அவசர அறைக்குள் தனியாக அழைத்து செல்லப்படுவர். உறவினர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது.

பாதிக்கப்பட்ட இத்தாலியர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள், கொரோனா வைரஸுக்கு அடிபடுவதற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

Francesca Cortellaro, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து(இறப்பதற்கு முன்) விடைபெறுவதற்கு முன் ஒரே வழி தொலைபேசி மூலம் வீடியோ காலில் பேசுவது.

அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான பாட்டி ஒருவர் இறப்பதற்கு முன், தன்னுடைய பேத்தியை பார்க்க விரும்புவதாக கூறினார்.

அதன் படி நானும் தொலைபேசியில், வீடியோ கோலில் அழைத்தேன். அவர்கள் பேசினர், அதன் பின் பேத்தி போய்விட்டாள்.

என்னிடம் இது போன்று நீண்ட வீடியோ கோல்கள் இருக்கின்றன. இதை நான் ஒரு பிரியா விடை பட்டியல் என்று வைத்திருக்கிறேன்.

மருத்துவர்கள் கண் முன்னே நோயாளிகள் இறப்பதை பார்க்க முடியும், அது மிகவும் வேதனையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவருடன் பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள், பேரழிவு ஏற்கனவே இங்கே உள்ளது என்று கூறினார். ஒரு சிலர் மருத்துவர்கள் இதை சுனாமி என்று விவரிக்கின்றனர்.

மேலும் இங்கு வரும் நோயாளிகளை காப்பாற்றுவதற்கே மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அப்படி ஒரு சிலர் கண் முன் உயிரிழக்கும் போது, அது அவர்களுக்கு ஒரு வித மன அழுத்தத்தை உருவாக்குவதாக பேராசியர் Stefano Muttini கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது ஒரு தொற்றுநோய் என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு தனிமைபடுத்தப்படுவர். சிகிச்சையில் இருக்கும் போது அவர்கள் இறந்துவிட்டால் அவ்வளவு தான், உறவினர்கள் கூட பார்க்க முடியாது, ஏனெனில் அந்த நோய் அவர்களுக்கும் பரவிவிடும் என்பதால், பார்க்க அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலி சிக்கி தவித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாமல் சீனாவின் உதவியை நாடியுள்ளது.

இத்தாலியில் மட்டும் 17,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,266 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இத்தாலி முற்றிலும் முடங்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More