2
கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டு கொடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் 1210 பேர் இராணுவத்தினரால் பேரூந்துகளில் இன்று வங்கிகளிற்கு அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமங்களிலிருந்து அரச பேரூந்துகளில் ஓய்வூதியர்கள் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டு மாதாந்த ஒய்வூதியத்தை பெறுவதற்கு ஏற்பாடுகள் படையினரின் ஒழுங்கு படுத்தலில் மேற்கொள்ளப்பட்டது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்த வயோதிபர்கள் இராணுவத்தின் இவ் ஏற்பாடு மூலம் தங்களது மாதாந்த ஒய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை அரசு மேற்கொண்டு கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.