பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் தலைமையில் மாவட்ட மக்கள் தொடர்பாளர் ஜாஹிர், எழும்பூர் தொகுதி செயலாளர் ஜாஹிர் ஹுசைன், மூத்த உறுப்பினர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர்(தெற்கு) அவர்களை இன்று நேரில் சந்தித்து சமூக வலைதளங்களில் மததுவேச கருத்துகளை பரப்புரை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.
நிர்வாகிகள் காவல்துறையில் அளித்துள்ள புகாரில்…,
தப்லீக் ஜமாத் என்னும் இஸ்லாமிய அமைதி குழுவினர் உலகில் உள்ள எல்லா நடுகளுக்கும் ஆன்மீக சுற்றுலா சென்று அங்குள்ள மசூதிகளில் தங்கி உலக அமைதிக்காகவும், உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இறைவன் நேர்வழியை காட்டவும் பிரார்த்தனை செய்வார்கள் . இந்த நடைமுறை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இக்குழுவினரால் நாடெங்கும் பின்பற்றப்பட்டு வருகின்றது .
அது மட்டுமின்றி தப்லிக ஜமாத்தினர் மிகவும் அமைதியானவர்கள் , சாதுவானவர்கள் . மேற்சொன்ன நடைமுறையை பின்பற்றி இந்தியா முழுவதும் தமிழகத்திலும் தப்லீக் ஜமாத்தினர் வெளி நாடுகளிலிருந்து வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் . இவர்கள் உலகெங்கிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களிலோ அல்லது சட்ட விரோத செயல்களிலோ ஈடுபட்டதாக வரலாறு இல்லை .
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு டெல்லி நிஜாமுத்தின் மர்கஸில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்களுக்கு கொரானா தொற்று அபாயம் இருப்பதாக அரசு சொன்ன தகவலின் அடிப்படையில் நாடு முழுவதும் மாநாடு சென்று வந்தவர்களுக்கு கொரானா பரிசோதனை நடைபெற்றுவருகின்றது . நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரனை நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் இருந்து டெல்லி சென்றவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று தமிழக அரசு அழைப்பு கொடுத்த 24மணி நேரத்திற்குள் 1103 பேர் தானாக பரிசோதனைக்கு முன்வந்துள்ளனர் . இதுவே அவர்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்பதற்கு சான்று .
அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் முறையான ஒத்துழைப்பை தப்லீக் ஜமாத்தும் , தமிழக முஸ்லிம்களும் தந்து வருகிறார்கள் . ஆனால் , தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் வெறுப்பையும் அவதூறுயையும் திட்டமிட்டு சிலர் பரப்பி வருகின்றனர் .
அவர்களில் குறிப்பாக பாஜக வின் முன்னாள் நிர்வாகி கல்யாணராமன், வலதுசாரி சிந்தனையாளர்கள் பானு கோம்ஸ், மாரிதாஸ் ஆகிய மூவரும் சமூக வலைதளங்கள் மூலம் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து அவதூறு, வெறுப்பு பிரச்சாரம் செய்து தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே இம்மூவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதுபோல முஸ்லிம்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்