செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் அடித்துக் கொலை

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் அடித்துக் கொலை

2 minutes read

கனடாவில் நேற்றுமுன்தினம் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் தமிழர் என ரொரன்றோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.4 மணியளவில் மோதல் சம்பவம் தொடர்பில் ரொரன்றோ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

அங்கு ஆபத்தான நிலையில் இருந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த கொலைச்சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வருகிறது.

அந்தப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இரண்டு ஆண்களுக்கு இடையில் ஆரம்பித்த வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கமலகண்ணன் உயிரிழந்தார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை ரொரன்றோ பொலிஸார் தேடிவருகின்றனர். சந்தேக நபர் 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நீல நிற ஜேர்ச்சி, சாம்ல் நிற காற்சட்டையும், கறுப்பு பாதணிகளை அவர் அணிந்திருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலிஸாரின் 416-808-7400 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ரொரற்றோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More