நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த நான்கு பேரும் கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இன்று பிற்பகல் பதிவான 4 கொரோனா நோயாளிகளுடன் இலங்கையில் இதுவரையில் 334 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மாத்திரம் 20 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கொழும்பிலேயே அதிகளவு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை 115 ஆகும்.
இலங்கையில் கடந்த ஆறு நாட்களில் 90 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த 20 பேரில் 11 பேர் புணானி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியிருந்த பேருவளையை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.