தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. பாகுபலி படம் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார். மேலும் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் ராணா நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராணா தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய காதலுக்கு இவர் ஓகே சொல்லி இருப்பதாக கூறி காதலி மிஹீகா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
மிஹீகா ஐதராபாத்தை சேர்ந்தவர். இன்டீரியர் டிசைனிங் படித்தவர். ராணா – மிஹீகா காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.