சிகரெட் பிடித்து பாழாய் போன நுரையீரலை சுத்தம் செய்ய, உணவுகள் தான் பெரிதும் உதவி புரியும். அதற்கு நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் என்னவென்று புகைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக நுரையீரலை சுத்தம் செய்ய முயலும் முன், புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும். இங்கு புகைப்பிடித்து கருகிப் போன நுரையீரலை சுத்தம் செய்ய மருத்துவ குணம் நிறைந்த நான்கு பொருட்களால் செய்யப்பட்ட ஓர் அமிர்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 1 1/2 இன்ச் (துருவியது)
வெங்காயம் – 1 கிலோ (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தேன் – 400 கிராம்
தண்ணீர் – 1 லிட்டர்
இஞ்சி
இஞ்சி நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை முறித்து வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் உள்ள சக்தி வாய்ந்த குணப்படுத்தும் தன்மையினால், சுவாசப் பாதையில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் முழுமையாக வெளியேற்றப்படும்.
வெங்காயம்
வெங்காயம் சுவாசம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்க உதவுவதோடு, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு வழங்கும்.
மஞ்சள்
உலகிலேயே மஞ்சள் மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஆற்றல்மிக்க ஓர் மசாலாப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் மஞ்சளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இது ஓர் சிறந்தகிருமிநாசினிப் பொருள். இதனால் இது உடலைத் தாக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட வல்லது.
தேன்
பல்வேறு இயற்கை வைத்தியங்களில் தேன் ஓர் மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பாக இருந்தாலும், இதில் உடலுக்கு பாதுகாப்பளிக்கும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.
செய்முறை
முதலில் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெங்காயம் மற்றும் இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து, தீயை குறைத்து பாதியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். கலவை பாதியாக வந்ததும், அதனை இறக்கி தேன் சேர்த்து கலந்து, வடிகட்டி குளிர வைத்து, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக் கொள்ளும் முறை
இக்கலவையை காலையில் எழுந்ததும் 2 டேபிள் ஸ்பூனும், இரவு உணவு உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு பின் 2 டேபிள் ஸ்பூனும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நுரையீரலில் சிகரெட்டினால் சேர்ந்த நச்சுக்கள் முற்றிலும் வெளியேறி, நுரையீரல் பிரச்சனைகள் நீங்கி, நுரையீரல் சுத்தமாகும்.
குறிப்பு
இதுவரை நீங்கள் நுரையீரல் பிரச்சனைக்கு அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், இம்முறையை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.