0
மாஸ்டர் படத்தின் டிரைலர் பார்த்தால் மெய்சிலிர்க்கும் என்று நாயகி மாளவிகா மோகனன் கூறியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். அவர் இதற்கு முன் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து அவர் கூறும்போது, சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதுதான் நான் முதன் முதலில் மாஸ்டர் டிரைலர் பார்த்தேன். இது நிச்சயம் ஒரு பித்துநிலைதான்… உங்களுக்கும் இது மெய்சிலிர்க்கும் படியாகத்தான் இருக்கும் என்றார்.