#Covid-19 #Corona Virus #People #கொரோனா #கோவிட்19 #எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் எண்ணக் கூடாது என சுகாதார சேவை பிரதி இயக்குனர் விசேட வைத்தியர் பபா பலிஹவன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் பேருந்தில் அல்லது ரயிலில் பயணிக்கும் போது சுகாதார ஆலோசனைகளை மறந்து செயற்பட்டால் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட கூடும்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தெளிவுப்படுத்துள்ள சுகாதார ஆலோசனைகளை பலருக்கு மறந்து போயுள்ளது.
கொரோனா தற்போது முடிவுந்துள்ளதாக எண்ணி பலர் செயற்படுகின்றனர். அப்படி இல்லை அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.
சுப்பர் மார்க்கட்டுக்கு சென்றாலும், கடைகளுக்கு சென்றாலும் சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும். தங்களுக்கு தேவையான முறையில் வீதிகளில் செயற்பட முடியாது. இன்னமும் கொரோனா நாட்டை விட்டு நீங்கவில்லை. நோயாளிகள் தொடர்ந்து அடையாளம் காணப்படுகின்றார்கள்.
பொது மக்கள் பாரிய அளவில் வீதிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு வீதிக்கு வாராதீர்கள் என்றே நான் அவர்களுக்கு கூற விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.