ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, இந்தியா, சீன நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் ரஷ்ய வெளிவிவாகார அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் காணொலி வாயிலாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்தார்.
”ஐ.நா. பாதுகாப்பு சபையில், நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் வர வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவு உள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யாவும் ஆதரவு அளிக்கிறது” என அவர் கூறினார்.
கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையில் வலிமைவாய்ந்த பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினர் நாடுகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 193 வாக்குகளில் 184 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. நிரந்தரமில்லாத உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.