அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சீனா மீது மேலும் மேலும் கோபம் வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 27 லட்சத்து 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்குச் சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், உலகம் முழுவதும் கொரோனா பரவலின் கோரமுகத்தைப் பார்க்க முடிவதாகவும், அமெரிக்காவில் அதனால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் தனக்குச் சீனா மீது மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.