செவ்வாய் கிரகத்திற்கு, ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய சீனாவுக்கு, ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களின் இயக்குனர் Simonetta Pippo பாராட்டு தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் வெற்றிகரமாக விண்களத்தை செலுத்தி உள்ளன.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், சீனா செலுத்திய விண்களம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு சென்றடைந்ததற்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா விண்வெளி விவகாரத்துறை இயக்குனர் Simonetta, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில், அனைத்து நாடுகளும் மனித சமூகத்தின் எதிர்கால நலன் கருதி, இணைந்து செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.