ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
இன்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே குறித்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கட்சியின் புதிய தலைவராக ரவிகருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்த்தன, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.