மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும்.
என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள்.
வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதாரணமாகவும் உடுத்திச் செல்வார்கள்.
ஆடை அணிய சில டிப்ஸ்
தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால், சாதாரண கொட்டன் துணிகளை உடுத்தினால்கூட நேர்த்தியாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது அழகாக தெரியும்.
எனவே, பெஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும்.
சீசனுக்கு ஏற்ற ஆடைகள்
ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும்.
கோடையில் கொட்டன் ஆடைகள் அணிவது உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.
ஆடைகளின் நிறம்
ஆடைகளின் வண்ணங்கள் மென்மை கலந்ததாக இருப்பது நல்லது.கறுப்பு, சிவப்பு மற்றும் “பளிச்’ வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும்.
இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே, கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வெள்ளிக்கிழமை உடை
வெள்ளிக்கிழமை என்றாலே ஸ்பெசல்தான். பெண்கள் என்றால் பட்டு வகையறாக்களில் தான் அலுவலகத்திற்கு கூட செல்வார்கள்.
வெள்ளிக்கிழமையன்று வெள்ளை நிற ஆடையில் செல்வது பாந்தமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.பணியிடங்களுக்கு ஜீன்ஸ் ஆடை ஏற்றதல்ல என்பதே நிபுணர்களின் அறிவுரை.