செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுவையான சிக்கன் வறுவல் | செய்முறை

சுவையான சிக்கன் வறுவல் | செய்முறை

2 minutes read

உங்கள் சுவையை தூண்டும் சிக்கன் வறுவல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சிக்கன் வறுவல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  சிக்கன் – 1 கிலோ
  •  மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  •  பெரிய வெங்காயம் – 3
  •  மல்லித் தூள் – 2 ஸ்பூன்
  •  எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  •  மிளகுத் தூள் -3ஸ்பூன்
  •  மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
  •  தக்காளி – 3
  •  இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3ஸ்பூன்
  •  தாளிப்பதற்கு
  •  பட்டை – சிறு துண்டு
  •  சோம்பு – 2 டீஸ்பூன்
  •  கறிவேப்பிலை – சிறிது
  •  பிரியாணி இலை -2

உணவு செய்முறை : சிக்கன் வறுவல்

  • Step 1.முதலில் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சிக்கனை நன்கு கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 1 மணி நேரம் வைக்க வேண்டும்.
  • Step 2.பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
  • Step 3.பின்பு அதில் மீதி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
  • Step 4.அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, சிறிது உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி போட்டு 20 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • Step 5.சிக்கன் வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளரி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான செட்டிநாடு சிக்கன் வறுவல் ரெடி.

நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More