தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சி.வி.விக்னேஸ்வரனின் நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது பொதுவான அரசியல் விடயங்களே பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலில் கடந்த காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் இவ்வாறு சந்தித்து, பேசியிருப்பது தமிழ் அரசியல் பரப்பில் பேசும்பொருளாக மாறியுள்ளது.