தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்னும் ஓரிரு நாட்களில் அஜித் இணைவார் என்றும் அவரது சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புக்கு தயார் நிலையில் படக்குழு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் தற்போது அஜித்துடன் யோகி பாபுவும் இணைகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தல அஜீத்துடன் யோகிபாபு நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இந்த வாரம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அஜீத் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் அஜித்துடன் யோகி பாபு நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.