யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.