கிறிஸ்மஸ் பண்டிகை மனிதர்களை மதிக்கவும் இயற்கையை ஆராதிக்கவும் வழிகாட்டும் ஓர் பண்டிகை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மனிதர்களையும் மதிக்கவும் மனிதாபிமானத்தின் மூலம் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் ஒட்டு மொத்தமாக ஆராதிக்க இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கிறிஸ்மஸ் பண்டிகை சகோதரத்துவத்தை முன்வைத்து காட்டும் ஓர் வழிபாட்டு முறை என தெரிவித்துள்ளார்.