April 2, 2023 4:05 am

இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் விவகாரம் : சென்னை நீதிமன்றம் அவசரம் அவசமாக விசாரனை.இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் விவகாரம் : சென்னை நீதிமன்றம் அவசரம் அவசமாக விசாரனை.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எனது இளைய மகள் தாமினியின் மனதை சந்துரு மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான் என்று தெரிவித்த இயக்குனர் சேரன், என் மூத்த மகளிடமும் “ஐ லவ் யூ” என்று பேஸ்புக்கில் சந்துரு கூறியுள்ளான் என்றார்.

சென்னையில் நேற்று 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சேரன், என் மனைவி செல்வராணியை இதுவரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியதில்லை. இப்போது தான் அறிமுகம் செய்கிறேன். எனக்கு 2 மகள்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த நான், பணக்காரன் அல்ல. அப்பா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனையும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை கவனமாக வளர்த்தேன்.

என் மனைவியும், நானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளைய மகள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததால் செல்லமாக வளர்த்தோம். அவருக்கு 18 வயதில் வந்த காதலை எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம். அதன்பிறகு பையனைப் பற்றி விசாரித்தோம். அவனது பின்னணி பயத்தை ஏற்படுத்தியது.

இருதய நோயுள்ள தாயுடன் வாழ்ந்த சந்துருவின் குடும்பத்தினரை சந்தித்தேன். அப்போது, மாதம் 10, 15 ஆயிரம் சம்பளத்துக்கு வழி செய்து கொள். வாழ்க்கையில் முன்னேறிக்காட்டு. 3 வருடத்துக்குப்பின் திருமணம் செய்து வைக்கிறேன். அதுவரை இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்றேன். அதை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் எனக்கு தெரியாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எனது மகளை எங்களுக்கு எதிராக தூண்டி விட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்து விடுவேன் என்று என் மகளையே என்னிடம் பேசச் செய்தான். உடனே நான் போன் செய்து அவனுடன் மகளை பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை செய்தேன். பிறகு அவன் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் பேசினான். என் மகளிடம் பேசக் கூடாது என்று சொன்ன நாட்களில் வேறு சில பெண்களுடன் இரவு வெகு நேரம் சந்துரு பேசி இருக்கிறான். அந்த ஆதாரங்களை திரட்டினோம்.

என் மூத்த மகளிடமும் “ஐ லவ் யூ” என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். 7, 8 பெண்களுடன் அவன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார். நடத்தைகள் மோசம், பொருளாதாரத்திலும் திருப்தி இல்லை. பெண்களுடன் தகாத தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும். அதுமட்டு மல்ல என் மகளிடம் உன் அப்பா படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய் என்று கூறியுள்ளான்.

எழில் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மகளே என்னிடம் கூறினாள். என் மகளை வைத்து சொத்துக்களையும் பணத்தையும் பறிக்க திட்டமிட்டு இருப்பதை உணர்ந்தேன். அவனை அடிக்கவில்லை. கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை. என் மகளே ஒரு கட்டத்தில் மனம் மாறி அவனை வேண்டாம் என்றாள். இப்போது திடீர் என்று அவளது மனதை மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான் என்று சேரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இயக்குனர் சேரன் மகள் தாமினி, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,தாம் காதலுடன் செல்லவே விரும்புவதாக நீதிபதிகள் முன் தெரிவித்தார்.
மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இயக்குனர் சேரன் மகள் தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, தாமினியின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்ட ஈஸ்வரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு,  “தாமினியை காதலித்த வாலிபர் சந்துருவை அடி ஆட்களை அனுப்பி கொலை செய்துவிடுவதாக திரைப்பட இயக்குனர் சேரன் மிரட்டியுள்ளார். இது குறித்து தாமினி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை என்ற பெயரில் அவரை காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும்” என்றார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை நீதிமன்றத்தில் போலீசார் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதை கேட்ட நீதிபதிகள், ஈஸ்வரி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து, பெண்கள் காப்பகத்தில் இருந்த தாமினியை இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சந்துருவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் பிற்பகலில்  வந்தது. அப்போது, சேரன்,அவரது மனைவி, மகள் தாமினி மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

அப்போது, காதலன் சந்துருவுடன் செல்ல விரும்புவதாகவும், தந்தை சேரனுடன் செல்ல விருப்பமில்லை என்றும் தாமினி கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை தாமினி மூத்த வழக்குரைஞர் என்.ஜி,ஆர் பிரசாத் வீட்டில் தங்கும்படி உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது, இயக்குனர் சேரன், தனது மனைவியுடன் உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்