நடிகர் விஜயின் தலைவா திரைப்படம் வெளியிடுவதில் தடங்கல் நடிகர் விஜயின் தலைவா திரைப்படம் வெளியிடுவதில் தடங்கல்

ரமழான் பெருநாளை முன்னிட்டு திரையிட இருந்த நடிகர் விஜயின் தலைவா திரைப்படத்துக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளை வெடிகுண்டு வைத்து தகர்ப்போமென மிரட்டல் விடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழக திரையரங்குகள் கடந்த திங்கள் கிழமையில் இருந்து மேற்கொண்டுவந்த ஆசனப்பதிவுகளை தற்காலிகமாக இடை நிறுத்திவைத்துள்ளன.

இதே நேரம் நடிகர் விஜய் இத்திரைப்படம் அரசியல் பேசும் படமல்ல, குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு படமென அறிவித்துள்ளார். மேலும் இப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மேற்கொள்வதற்கு தமிழக காவல்துறையை அணுகியபோதும் சாதகமான பதில் காவல்துறையிடம் இருந்து கிடைக்காமையால் விஜய் தரப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தபோதும் ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நாளை 9ம் திகதி இத் திரைப்படம் திரையிடப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசிரியர்