சினிமா நூற்றாண்டு விழா: சென்னையில் திரையிடப்படும் இலவச படங்கள் பட்டியல்சினிமா நூற்றாண்டு விழா: சென்னையில் திரையிடப்படும் இலவச படங்கள் பட்டியல்

100th Indian Cinema

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நாளை (16–ந்தேதி) முதல் 24–ந்தேதி வரை சத்யம், உட்லண்ட்ஸ், 4 பிரேம்ஸ் திரையரங்குகளில் காலை 11.30 மணிக்கும்,அபிராமி தியேட்டரில் மாலை 6.30 மணிக்கும் இலவசமாக பழைய படங்கள் திரையிடப்படுகின்றன.

சத்யம் தியேட்டரில் திரையிடப்படும் படங்கள் விவரம்:

16–ந்தேதி –ஆயிரத்தில் ஒருவன், 17–ந்தேதி– கர்ணன், 18–ந்தேதி –ரிக்ஷாகாரன், 19–ந்தேதி –அடிமைப்பெண், 20–ந்தேதி – மாயாபஜார் (தெலுங்கு). 21–ந்தேதி – பங்காரத மனுசுய (கன்னடம்), 22–ந்தேதி– செம்மீன் (மலையாளம்), 23–ந்தேதி – ஒலவும் திரவும் (மலையாளம்), 24–ந்தேதி – சங்கொள்ளி ராயண்ணா.

உட்லண்ட்ஸ் தியேட்டர்:

16–ந்தேதி மகதீரா (தெலுங்கு), 17–ந்தேதி –சிரித்து வாழ வேண்டும், 18–ந்தேதி –ஆண்டவன் கட்டளை. 19–ந்தேதி: பந்தனா (கன்னடம்), 20–ந்தேதி – சவாலே சமாளி, 21–ந்தேதி – ஜாக்ரி (கன்னடம்), 22–ந்தேதி – செம்மீன் (மலையாளம்), 23–ந்தேதி – கலாட்டா கல்யாணம், 24–ந்தேதி: மாயாபஜார் (தெலுங்கு).

4 பிரேம் தியேட்டர் (வள்ளுவர் கோட்டம் அருகில்):

16–ந்தேதி –பங்காரத மனுஷ்ய (கன்னடம்), 17–ந்தேதி –செம்மீன் (மலையாளம்), 18–ந்தேதி –பாண்டவ வனவாசம் (தெலுங்கு), 19–ந்தேதி –கெளரவம், 26–ந்தேதி –பாண்டுரங்க மஹாத்யம் (தெலுங்கு), 21–ந்தேதி – காவிய மேளா (மலையாளம்), 22–ந்தேதி –மகதீரா (தெலுங்கு), 23–ந்தேதி– சதுவுக்குன்ன அம்மாயிலு (தெலுங்கு) 24ந்தேதி –குண்டம்ம கதா (தெலுங்கு).

அபிராமி தியேட்டர்: 16–ந்தேதி பாசமலர், 17–ந்தேதி –நாடோடி மன்னன், 18–ந்தேதி –மாயாபஜார் (தெலுங்கு), 19–ந்தேதி –சத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்) 20–ந்தேதி –மகதீரா (தெலுங்கு), 21–ந்தேதி –சாட்டை, 22–ந்தேதி –பருத்தி வீரன், 23–ந்தேதி –அரவான். 24–ந்தேதி –அடிமைப் பெண்.

ஆசிரியர்